
May 2022 / பேசும் புதிய சக்தி இதழுக்கு நேர்காணல் உரையாடல் – நா. விச்வநாதன் பதில்கள் எஸ்.சங்கரநாராயணன் Ø “எழுத்து என்பதே வாசகன் மீது Ø நிகழ்த்தப்படும் சிறிய வன்முறை.” ----- நிறைய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் எனப் போட்டிருக்கிறீர்கள். எல்லாமே வாசக கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன. இது ஒருவகையில் வெற்றி என்றாலும் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா? சாதனை எனக் கொள்ளலாமா? • என்னைப் பேட்டி என்று அழைத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும். ஆமாம். ஒருவேளை நிறையத்தான். எல்லாமாக ஒரு நூறு நூல்கள் இருக்கலாம். திரும்பிப் பார்த்தால் எனக்கே இது ஆச்சர்யம் தான். வாசகர்கள் மாத்திரம் அல்ல, என் பதிப்பாளர்களே (ஏறத்தாழ ஒரு டஜன்) எனது சிறந்த ரசிகர்கள், எனது மு தல் வாசகர்கள் அவர்களே. இது என் அதிர்ஷ்டம் என்றே கொள்ளலாம். கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன என் எல்லாப் படைப்புகளும், என நீங்களே அங்கீகாரம் அளித்தபின் வேறு யோசனை எதுவும் இந்தப் படைப்புகள் பற்றி எனக்குத் தேவை என்ன இருக்கிறது? என் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா, என்றால், எழ...