
திண்ணை இணைய இதழில் வெளியான கதை நஞ்சு எஸ்.சங்கரநாராயணன் ‘அ வர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.) தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் கொள்வான். உங்களுக்கு மருந்தகம் வரை போற வேலை மிச்சம்தானே? பல்துறை வித்தகனாக அவன் இருந்தாலும் முதல் பார்வைக்கு அவனை “கம்பவுண்டரா?” என்று கேட்டார்கள் வந்தவர்கள். அத்தனைக்கு மோசமில்லை என நினைத்தவர்கள் கூட அவனிடமே “டாக்டர் இல்லையா?” என்று கேட்டார்கள். பஞ்சாட்சரம் சுருங்கி பஞ்சு என ஆனால், அவன் பெயர் நஞ்சுண்டேஸ்வரன், அது சுருங்கி நஞ்சு என ஆகிவிட்டது. அவங்க வீட்டிலேயே அவன் நஞ்சுதான். ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் போல விபரீத ராஜமோசமாகிப் போயிற்று. நஞ்சு, மருந்து இரண்டுக்குமே கேது ஆதிபத்தியம். அவன் உத்தியோகத்துக்கு ஒத்துப் போனது. நம்மாட்கள் சங்கட ஹர ...