Posts

Image
சுருக்குவலை (The Purse Seine, 1937) ராபின்சன் ஜெஃபர்ஸ் • கடற்கரை வளைவில் ஒரு குன்று அங்கிருந்து பார்வைக்கு எட்டிய வரை மேலைக்கடலின் கரிய நீர்ப்பரப்பு நிலவின் மங்கிய வெளிச்சத்தில் கடல்மீன்களின் மின்வெட்டும் பளபளப்பு பால் சிந்திச்சிதறியது போல் ஒரு மீன்கும்பல் வட்டமிடும் இயந்திரப்படகில் இருந்து அதைநோக்கி வீசப்பட்ட சுருக்குவலை அது பரந்து மெல்லத் தாழ்ந்து வெண்ணிறத் திட்டின்மேல் விழுந்து அதன் திறந்த அடிப்பகுதியின் வட்டம் மீன்களை வளைத்து நீருக்குள் இறங்கி வேகமாகச் சுருங்கி இறுக்கிக்கொள்ள, சரக்கை படகுக்கு இழுத்த வலிய கரங்கள். எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை அழகான ஆனால் அச்சுறுத்தும் காட்சி சிக்கிக்கொண்ட கடல்மீன்களின் கூட்டம் நீரில் இருந்து நெருப்புக்குள் பாய்ந்த அழகிய வடிவான வெள்ளிக்கத்திகள் வலையின் ஒரு புறத்தில் இருந்து எதிர்ப்புறத்துக்கு வாலை வேகமாகத் துடித்து நீந்தினாலும் வலையின் கயிறுகள் தான் எல்லை வேடிக்கை பார;த்த கடல் சிங்கங்கள் வானம்வரை இரவு விரித்த கறுப்புத்திரை அம்மீன்களுக்கு...
Image
தவளைக்கச்சேரி (கவிதைத் தூறல்) எஸ். சங்கரநாராயணன் எஸ்.சங்கரநாராயணனின் பிற கவிதை நூல்கள் • 01, கூறாதது கூறல் (கவிதை பம்பரம்) 02, ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்) 03, ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்) 04, திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்) 05, கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி) ம னுசாளுக்குக் கலகலப்பு முக்கியம். தைராய்டு, கூடவே இப்போது சர்க்கரை அளவும் உடம்பில் அதிகமாகி யிருக்கிறது. தலை கிர்ர் என்று உருமுகிறது. சுற்றுகிற சுற்றலில் கழுத்தைப் பிய்த்துக்கொண்டு பறந்துவிடும் போலிருக்கிறது. உடல் அசதி. சோர்வு. படபடப்பு. எதிலும் கவனம் இன்மை. கவனச் சிதறல். இதனூடே எழுதுகிற ஆசை, விடாத ஆசை. எழுத முடியாத ஏக்கம் வேறு. கதைகள், களங்களும் கருக்களும் என உள்ளே முட்டி மோதுகின்றன. ஓட முடியாத குதிரை நான். இப்போது மணல் கண்ட இடத்தில் புரண்டு தன்னை உரசி உற்சாகப் படுத்திக் கொள்ளும் முனைப்பு தட்டி இப்படியோர் எடுப்பு. மனசின் நிழலாட்டங்களை சிறு குறும்புடன் பதிவுகள் செய்தால் என்ன? உடல் சோர்வு தட்டும் போதெல்லாம் இப்படி நான இயங்கி வந்திருக்கிறேன்… இது எனது ஆறாவது நூல் இவ்வ...
Image
எம்எஸ்வி – மரபின் தொடர்ச்சியும் மீறலும் ச. சுப்பாராவ்   ஒ ரு கலையின் வளர்ச்சிப் போக்கிற்கு மரபின் தொடர்ச்சியும், மரபை மீறுதலும் மிக அவசியமானதாக உள்ளன. ஒரு கலையில் புதிதாய் தன் திறமையைக் காட்டும் கலைஞன் ஆரம்ப நாட்களில் மரபைத் தொடர்வதும், தான் காலூன்றியதும், மரபை மீறி இன்னும் மேலெழும்பி சாதனைகள் புரிவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கலைவடிவம் ஒன்றின் வளர்ச்சிக்கு, செழுமைக்கு இந்த இரண்டும் அவசியம் என்றாலும், மரபை நன்கு அறிந்தபின்பே மீறவேண்டும் என்பார்கள் அறிஞர்கள். சமீபத்தில் மறைந்த இசைமேதை எம்,எஸ், விஸ்வநாதனும் இந்த நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. அவரது மரபார்ந்த இசையும், மரபு மீறிய இசையும் பல தலைமுறை இசை ரசிகர்களுக்கும் தந்த பரவசத்தை நாளெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். தமிழ் திரையிசையின் மரபு தவிர்க்க முடியாதபடி கர்னாடக சங்கீத மரபாகவே இருந்தது. அன்றைய திரைப்படங்களும் புராண, ராஜா ராணிக் கதைகளாக இருந்ததால் இந்த செவ்வியல் இசையும் மிகப் பொருத்தமாகவே இருந்தது. ஜி.ராமநாதன், சி,ஆர்,சுப்பராமன் போன்றோர் வழி வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இந்த மரபின் தொடர்ச...
Image
மாயபிம்பம் அமர்நாத் (நாவலின் பகுதி) • 'ப்ரணவ்! இந்த வாரத்துக்கு என்ன?”   'என் ஜெர்மன் பாடத்தில் வந்த ஒரு கவிதை.  ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கற்பனை. படித்தவுடனே பிடித்துவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்தேன்.”   'எங்கே, காட்டு!” அவன் நீட்டிய காகிதத்தில். வாழ்க்கைக் கட்டங்கள் அரும்புகட்டி மலர்ந்து வாடும் பூக்கள் முதுமையைத் தேடிப்போகும் இளமை ஒவ்வொரு முடிவும் இன்னொன்றின் ஜனனம். ஒரு பருவத்தின் அறிவும் பெருமையும் தொடர;ந்து நம்முடன் வருவது நியாயம் இல்லை. நிகழ்காலத்துடன் பிரிவு எதிர;காலத்தின் வரவேற்பு. நாளை புதிய வார்ப்புகள், புதிய இணைப்புகள். ஒவ்வொரு ஆரம்பமும் ஒரு ஜாலம். அதுவே வாழ்க்கையின் சுவாசம். பழகிவிட்ட இல்லம் நமக்குச் சிறை. தினசரி வழக்கங்கள் கைகால் விலங்குகள். நிரந்தரம் நம்மைக் கட்டிக்காக்கும் காவல். வீட்டுக்கு வெளியே கைநீட்டி அழைக்கும் முடிவற்ற தொடுவானம், அதோ!  ஒரு கட்டம் அதில் அடுத்த கட்டத்தின் நுழைவாயில் வழிகாட்ட பிரபஞ்ச சக்தி. பரிச்சயங்களுக்கு விடைசொல்லி பயணத்தைத் தொடர ஏன் தயக்கம்? இறப்பும் ஒரு...
Image
திருவையாறு (நன்றி குங்குமம் வார இதழ்) எஸ். சங்கரநாராயணன்   க ண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல! என்ன ஸ்வரம் அது, என்று  மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவைகளின் துல்லியம் கவிதைத் திவலைகள். காற்றில் ஒலிகள் பிறந்தபோதே இசை உருவாகி விட்டது. ஒலி இசையாகிற போது மனம் இணக்கநிலைக்கு இளகிக் கொடுக்கிறது. மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. உள்ளங்கைகளைத் தேய்த்து சூடு பண்ணிக் கொண்டார். அப்படியே கண்ணில் வைத்துக் கொண்டார். உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டு எழுவது அவர் பழக்கம். புகைப்படப் பெட்டியைக் கருப்புத் துணி போட்டு மூடி யிருந்...
Image
manalveedu - may 2017 வெ யி ல் எஸ். சங்கரநாராயணன் எ ழுத்தாளர் கலிங்கமித்திரன் இறந்து போனார். வயதானவர்தான். இதற்கு மேல் நாம் உலகத்தில் செய்ய எதுவும் இல்லை, என்கிறாப் போலத்தான் அவருக்கும் இருந்தது. இதுவரைக்கும் தான் என்ன செய்தோம், அதுவே தெரியவில்லை. மூப்பெய்தி அலுத்திருந்தார். எதுவுமே அழுத்தமாக அவர் மனதில் பதியவில்லை. மகிழ்ச்சி, துக்கம்… என எதிலுமே அவர் ஒட்டாத நிலைக்கு வந்திருந்தார். உடலும் மனசும் அதன் ‘எலாஸ்டிக்’ தன்மையை, பொங்குதல் மீண்டு சுருங்குதல்களை இழந்துவிட்டிருந்தன. நாட்கள் அவற்றின் வீர்யத்தை இழந்திருந்தன. கதைகள் எழுத முடியவில்லை. எழுத எதுவுமே இல்லாதிருந்தது. வயது அவரைக் காலிப் பாத்திரமாக ஆக்கி இருந்தது. சாவு வந்துவிட்டால் தேவலாமாய் இருந்தது. எப்போது வரும் தெரியவில்லை. எவ்வளவு தான் காத்திருப்பது. வாழ்வுக்குக் காத்திருப்பதில் ஓர் அர்த்தம் இருந்தது. எதிர்பார்ப்பு இருந்தது. சாவு? அதற்காகவா காத்திருப்பது? வேறு வழியும் இல்லை. இப்போது எழுத்தாளர்கள் எல்லாரும் கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். திருத்தங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய கணினி மகா வசதி. அவர் கையால் தான் எழுத...