Posts

Image
the old man and the sea - tamil translation பெரியவர் மற்றும் கடல் / பின்னுரை ரசிகன் மொழிபெயர்ப்பாளன் உரையாசிரியன் ஹெமிங்வே என் ஆசான். உலக இலக்கியத்துக்கே அவர் நெறியாளர். அவரது இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 'ஓல்ட் மேன் அன்ட் தி ஸீ' நாவலை நான் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஓர் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை அது எனக்குக் கற்பித்தது. தனியே ஒரு கிழவன். அவனது அசாத்திய தன்னம்பிக்கை. அவன் மாத்திரமே பிரம்மாண்டமான கடலில். கூட அவனிடம் சிக்கிய பெரிய மீன். அதனுடன் அவனது போராட்டம். யார் ஜெயிக்கப் போகிறார்கள்?... என்கிற முடிச்சு. ஆ, மனிதன் மகத்தானவன் என்ற முத்தாய்ப்பு. எத்தனை வசிகரமான கரு. என்ன வசிகரமான நடை. வாழ்க்கை மீதான பிரியம். சவால்களின் தேடல். சாதனைத் தினவு. கிழவன் மற்றும் மீன். தவிர கடல். இதில் கிழவன் தனக்குத் தானே பேசிக் கொள்கிற உத்தி அற்புதமானது. முழு கதையையும் இந்த உத்தியில் ஹெமிங்வே சிரமம் இல்லாமல் கூறிச் செல்ல முடிகிறது... இந்த உத்திதான் அந்த வயதில், என் எழுத்தின் மொட்டுப் பருவத்தில் என்னைக் கிறங்க வைத்தது. ஹெமிங்வே என...
Image
நன்றி - ‘காணி நிலம்’ -  (பெயல் – நாவல். ஆசிரியர் சைலபதி. பக். 190 விலை ரூ. 180/- வெளியீடு யாவரும் பதிப்பகம்.)   நில் எனப்  பெய்யும் மழை 2004 திசம்பர் வாக்கில் சுனாமி சென்னையைத் தாக்கியது. அதற்கு அடுத்த பெரு நிகழ்வாக 2015 திசம்பரில் சென்னை கண்ட பெருமழையும் அதைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கும். பிறகு 2016 ல் அதுவும் திசம்பர் மாதம்தான், சென்னையைத் தாக்கியது வார்தா புயல். இவற்றைப் பற்றியெல்லாம் போதுமான அளவில் படைப்புகள் எழும்பி வரவில்லை என்பது ஆதங்கமான விஷயம் தான். அரசியல் ரீதியான பெரும் சட்டாம்பிள்ளைத் தனங்களில் தமிழ் சிக்கி, அடங்கிக் கிடக்கிறது. ஆனால் ஆவணங்களுக்கு நடுவே, புனைவுகள் தான் அந்த அவலங்களை மேலும் காத்திரமாக, உக்கிரமாக பிற்கால சந்ததிக்கு எடுத்துரைக்க வல்லவை. சைலபதி 2015 சென்னைமழை பற்றிய தன் அவதானிப்பை மனசிலேயே விளைவித்து நாவல் என அறுவடையாக்கி யிருக்கிறார். ‘பெயல்’ என்கிற அவரது சமீபத்திய நாவல் அந்த நிகழ்வைச் சுற்றியும் நேராகவும் தொட்டுப் படர்ந்து பரவுகிறது. நேரடிப் பாத்திரங்களே அவருக்கு இதில் உதவிகள் அதிக அளவில் செய்திருக்கின்றன. பெருமழை ப...
Image
நன்றி பேசும் புதியசக்தி மாத இதழ் அதிகாலைத் தளிர் கிரணம் சூசா செல்யம் (ஹங்கேரி) தமிழில் எஸ். சங்கரநாராயணன்   ஒ ரு ரம், ஒரு பீர் தருவித்தேன். அவன்… உள்ளே நுழைந்தான், அப்படியே அந்தரத்தில் கரைந்து விடமாட்டேனா என ஆகிவிட்டது. அட நல்லூழே, இப்ப என்னைப் பார்க்க எப்பிடி இருக்கும். அவனைத் திரும்ப சந்திப்பேன் என்கிற எண்ணத்தையே எப்பவோ நான் விட்டுவிட்டேன். எத்தனையோ வருஷம் முன்னாலேயே அவன் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டவன். எத்தனை வருஷம்னு எண்ணக் கொள்ளாது. வருடங்கள், மாதங்கள, நாட்கள் என இப்போது எனக்கு எதுவுமே இல்லாமல் ஆகிப்போனது. என்னிடம் இப்போது நான் என்ற பிரக்ஞையே அற்றுப் போய்விட்டது. பருவகாலங்கள், அதைப் பின்தொடர முடியும்… குறைந்தபட்சம் அதை நான் யூகம் செய்துகொள்ளலாம். இந்தக் கந்தல் உடைகளில் என் உடம்பே தகித்தால் அது கோடை. நடுக்கம் எடுத்தால் குளிர்காலம். எனக்கு வசந்தமும் இலையுதிர்வதும் ஒரே மாதிரி தான். அவன் நல்ல பையன்தான். அவனைப்போல என்னை நேசித்தவர் வேறு யாரும் இல்லை. என்னை நேசித்தவர்கள், எல்லாரும் இறந்து விட்டார்கள். அம்மா, அப்பா, எல்லாருமே. என் சொந்தக்காரர்களில் ஒருத்தர் கூட...
Image
Published in ‘Kaaninilam’ - quarterly புல் எஸ். சங்கரநாராயணன் ஊ ராட்சி ஒன்றியக் கட்டடம் எப்பவுமே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக வாசல் பரபரத்துக் கிடக்கும். கையில் குழாய் போல பேப்பரைச் சுருட்டியபடி யாராவது காத்திருப்பார்கள். பத்து தலை ராவணன் போன்ற அகல எடுப்பான கட்டடம். உச்சியில் பெரிதாய் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதியிருக்கும். காம்பவுண்டுச் சுவர் கோட்டு மீசை வைத்தா மாதிரி முன் எடுப்புக்கு மாத்திரம். சினிமாவில் இப்படிதான் செட்டு போடுவார்கள். முன்பகுதிக்கு மாத்திரம்ஞ் அதுவே சிதிலமடைந்து செங்கல் தெரிந்தது. சில இடங்களில் பிளவு விட்டு அதன் இடுக்கு வழியே செடி வெளியே எட்டிப் பார்த்தது. மூக்கு மயிர்கள் போல. தாண்டி சிறிது குழிவான பகுதியில் ஆலமரம் ஒன்று. விழுதுகள் பரவிய பெரிய மரம். ஊருக்கே அடையாளம் அது. அதுகொள்ளாத பறவைகள். பறவைகள் மரங்களை வளர்க்கின்றன. மரங்கள் பறவைகளை வளர்க்கின்றன. ஊரில் நிறைய ஆல மரங்கள். பெயரே ஆலங்கொட்டில். வாயிலில் பெயருக்கு ஒரு கிராதி இரட்டைக் கதவு. எப்பவோ திறந்தது மூடப்படவே இல்லை. கதவின் இரும்பைச் சுற்றி மண் மேடுதட்டி இறுகிக்கிடந்தது. இ...
Image
மூங்கில் எஸ். சங்கரநாராயணன் அ வள் வைதேகி. அக்கா. இவள் சக்தி. தங்கை. அக்காவும் தங்கையும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து இப்போது அக்கா கல்லூரி போகிறாள். தினசரி ஒண்ணாய் ஒரே வேனில் பள்ளிவரை அக்காவோடு உற்சாகமாய்ப் போவாள் சக்தி. இப்போது தனியே போவது அவளுக்குக் கஷ்டமாய் இருந்தது. ஆனால் அக்காவைப் பார்க்க மகிழ்ச்சி. கல்லூரியில் திங்களுக்குத் திங்கள் புடவை கட்ட வேண்டும் என்று கட்டாயம். வைதேகியைப் புடவையில் பார்க்க சக்திக்குச் சிரிப்பு. எந்நேரமும் புடவை சரியலாம் என்கிற சிறு பதட்டத்துடன் தெருவில் நடந்து வருகிற அக்காவைக் கிண்டல் அடித்தாள். “இருடி உனக்கும் இருக்கு…” என்றாள் அக்கா அழாக் குறையாக. “புடவை கட்டற காலேஜ்னா நான் வேணான்னுருவேன்ல” என்று அதற்கும் சிரித்தாள் சக்தி. என்றாலும் அக்காமேல் கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அக்கா போல தான் அழகும் அல்ல. நிறமும் அல்ல. நிறத்தில் நான் அப்பா, என்றால் அவள் அம்மா மாதிரி. எந்த உடையும் அவளுக்கு, வைதேகிக்கு மேச்சாய் அமைந்து விடுகிறது. சற்றே பெண்மையின் ஆளுமை மிக்க அக்கா. வெளியே கிளம்பினால் ஒரு விநாடி நின்று கண்ணாடி பார்த்துவிட்டுக் கிளம்பும் அக்கா. கண்ணுக்கு...
Image
இல் அறம் Short story – நன்றி குங்குமம் வார இதழ் எஸ். சங்கரநாராயணன்   வீ ட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவள், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்க அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது. வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று...