Posts

Image
உலகச் சிறுகதை பெ ய ர் க ள் ---------------------------------------- ஜான் அப்டைக் தமிழில் எஸ்.சங்கரநாராயணன் பா ஸ்டனில் இருந்து திரும்பி வருகிறார்கள். ஜாக் காரோட்டிக் கொண்டு வந்தான். அவனருகே முன்னிருக்கையில் ஒரு குழந்தைத் தொட்டில். மகன் அதில் உறக்கத்தில். பின்னிருக்கையில் கிளாரே. ஜோ என்கிற இரண்டு வயது மகளுடன். அவளுக்காக எதோ பாடிக்கொண்டிந்தாள். “வயலில் பட்டாணிகள் வெடித்தன. பறவைகள்?...” “கிங்...” என்றது குழந்தை. பாடின, சிங் என்று சொல்ல வரவில்லை அதற்கு. “உனக்குப் பட்டாணி பிடிக்குமே? எவ்ளோ ருசியா இருக்கும். அதை யாருக்குப் பண்ணித் தரணும்?” “கிங்” என்றது குழந்தை திரும்பவும். அவர்கள் சிங் கிங் என்று எதுகை வருகிறாப் போல எதுவும் பாடல் பாடியிருக்கலாம். “அருமை.” “பறவை மூக்கு, அந்தப் பாட்டு பாடும்மா.” “அதென்னடி பாட்டு? அந்தப் பாட்டு எனக்குத் தெரியாதே. எங்க பாடிக் காட்டு...” “எங்க பாடிக் காட்டு...” “நான் கேக்கறேன் உங்கிட்ட! பறவை மூக்கு பாட்டை யாரு பாடுவா? மிஸ் தூனி பாடிக் காட்டினாளா?” அந்தப் பெயரை ஒருமுறை சொன்னபோது ஜோ சிரித்தாப் போல இப்பவும் சிரித்தாள். மிஸ் தூன...
Image
விளக்கின் நிழல் எஸ்.சங்கரநாராயணன் ச ரவணனுக்கு நினைவு திரும்பியபோது தொடைவரை காலை வெட்டி எடுத்திருந்தார்கள். வேறு வழியில்லை. வலது கால் அத்தனைக்கு சேதமாகியிருந்தது. அவனே தடுமாறி நடந்து உருண்டு தவழ்ந்து, எப்படியெல்லாம் முடியுமோ அத்தனை போராட்டங்களுக்குப் பின், வரும் வழியில், கண்டெடுக்கப் பட்டிருந்தான். மீட்பு ஹெலி பார்த்ததும், அடடா, அவனுக்குத்தான் என்ன உற்சாகம். அவன் மீட்கப்பட்டான். அதற்குள், காலில் குண்டு பாய்ந்த இடம் நீலம் பாரித்து அழுக ஆரம்பித்திருந்தது. ஒரு கெட்ட வாசனை வந்தது. வாந்தி வரும் போலிருந்தது. அவன் எட்டு நாளாய்ச் சாப்பிட்டிருக்கவில்லை. எட்டுநாள் என்பதே உத்தேசக் கணக்கு தான். நாள் தேதி கிழமை அனைந்தும் மறந்திருந்தான். காலமே உறைந்து கிடந்தது அங்கே. உணவு எடுக்கவும் இல்லை. அதனால் வாந்தி எடுக்கவும் தெம்பு இல்லை. திணறலாய் இருந்தது. உணவு கையிருப்பில் இருந்தது தீர்ந்து போயிருந்தது. ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே பத்திரப்படுத்திக் கொள்வான். தண்ணீர் கிடையாது. பனியே தண்ணீர். குளிரோ உடலை வாட்டியெடுக்கிறது. கடுமையான ஜுரம். எழுந்து கொண்டால் உடலே வெடவெட வென்று அதிர்ந்தது. கண்ண...
Image
உவகச் சிறுகதை / ஜப்பான் நன்றி - மகாகாவி ஜனவரி 2019 இதழ் ஜே யாசுனாரி கவாபாட்டா தமிழில் எஸ். சங்கரநாராயணன் வை கறைப் பொழுதில் இருந்தே ஜே உரக்கப் பாட ஆரம்பித்திருந்தது. மழைத் தடுப்பான கதவுகளை அவர்கள் ஒதுக்கித் திறந்தார்கள். பைன் மரத்தின் கீழ்க் கிளையில் இருந்து மேலெழுந்து அது பறந்ததை எல்லாரும் பார்த்தார்கள். ஆக அது திரும்பி வந்திருந்த மாதிரிதான் பட்டது. காலை உணவுவேளையின் போது அதன் சிறகடிப்பு கேட்டது. “ஐய அந்தப் பறவை ஒரு இம்சை.” தம்பி எழுந்துகொண்டபடியே சொன்னான். “சரிடா சரிடா” என அப்பத்தா அவனை அடக்கினாள். “அது தன் குஞ்சைத் தேடுதுடா. நேத்து அதன் குஞ்சு கூட்டில் இருந்து கீழ விழுந்திட்டது போல. நேத்தி அந்தி சாயறவரை அது இங்கிட்டும் அங்கிட்டுமா பறந்துக்கிட்டே யிருந்தது. குஞ்சு எங்கன்னு அது இன்னும் கண்டுபிடிக்கலையோ என்னவோ? ச். என்ன நல்ல அம்மா அது, இல்லே? காலை வெளிச்சம் வந்த ஜோரில் திரும்ப என்ன ஏதுன்னு பாக்க வந்திருக்கு.” “அப்பத்தா அழகா எல்லாம் புரிஞ்சிக்கறா” என்றாள் யோஷிகோ. அப்பத்தாவின் கண்கள் ஒண்ணும் தரமில்லை. ஒரு பத்து வருசம் முன்னாடி அவள் ‘நெஃப்ரைட்டிஸ் ஒன்’ வந்து சிரமப்...
Image
உலகச் சிறுகதை நடக்க முடியாத நிஜம் சார்லஸ் மெய்கிவி (ஆஸ்திரேலியா) தமிழில் - எஸ். சங்கரநாராயணன் பு தன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எஃப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.       இப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் லாயக்கில்லாதவனாய் ஆகிப் போனான். சிரமதசையில்தான் வாழ்ந்தான் என்று தோணுகிறது. ஆனால் கஷ்டம் யாருக்குத்தான் இல்லை...       புதன்கிழமை காலை, பதினேழாம் எண் காற்றாலைவரை நான் வாகனமெடுத்துப் போனேன். எங்கள் குடோனுக்குத் தேவையான தண்ணீர் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருந்தது. காற்றாலை அருகில் ஒரு இருநூறு மீட்டர் கிட்ட...