Posts

Image
நன்றி வடக்குவாசல் மாத இதழ் நிர்த்தாட்சாயணி எஸ். சங்கரநாராயணன் ஐ யா கதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்கிறேன். இது நான் எழுதும் முதல் கதை ஆகும். மேலும் கதைகள் எழுதுவேனா தெரியாது. அதற்கான நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இந்தக் கதை முடியும்போதுதானே எனக்கே புலப்படும்? இப்போதே இதன் கட்டுரை நடை என்னை ஆயாசப் படுத்துவதை உணர்கிறேன். சகித்துக் கொள்ளுங்கள். இத்தனை சீக்கிரம் நான் அலுப்படைந்துவிட முடியாது.             கதை என்றால் நீதி தேவையா தெரியவில்லை. எதற்கும் நீதி ஒன்று வைத்துக் கொள்வது நல்லது. மழை வராங்காட்டியும் சும்மா குடை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்புவது இல்லையா...             சரி - இந்தக் கதைக்கு நீதி என்ன? பழைய ஈசாப் ரகமான நீதிதான். அதான் சொன்னேனே நான் பெரிய எழுத்தாளன் ஒன்றும் அல்லன். தவிரவும் இது என் முதல் முயற்சியும் ஆகும்...             ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ஆட ஆச்சரி...
Image
குறுந்தொடர் ராகு கேது ரங்கசாமி எஸ்.சங்கரநாராயணன் • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய ஜாகை. சித்திரக் குளம் அருகே மகாதேவ (சாஸ்திரி) தெரு. இப்போது அவர் வெறும் மகாதேவன். சாஸ்திரி அல்ல. வால் இழந்த நரி. மாற்றங்கள். தெருவுக்குப் பழைய அடையாளங்கள் அழிந்து புதிய அடையாளங்கள் வந்திருக்கின்றன. தெரு துவக்கத்தில் ஆவின் பூத். முன்போ அங்கே மாடுகட்டி அதிகாலை நாலு நாலரைக்கெல்லாம் நுரைக்க நுரைக்கப் பால் கறப்பார்கள். விடியலின் தளிர் வெளிச்சத்தையே அவர்கள் இப்படி சர்ர் சர்ரென்று பாத்திரத்திற் பிடிக்கிறாற் போலிருக்கும். தெருவில் இப்போது உயரமாய் கட்டடங்கள் எழுந்துவிட்டன. இத்தனை காலமாய் அவற்றை யாரோ காலால் அழுத்தி பூமிக்கு அடியிலேயே ஒளித்து வைத்திருந்தார்கள். அதிரடியாய் மாற்றங்கள். விரல் சொடுக்கும் பொழுதுக்குள் மாற்றங்கள் வருவதைப் பற்றிக் கூட இல்லை. ஆனால் அது ஆக்கிரமிக்கும் விரைவு, மலைப்பாய் இருக்கிறது. ஒரு பத்து பதினைந்து வருடம் முன்னே இந்த டேப்-ரிகார்டரும் சி.டியும் தொலைக்காட்சியும், விசியாரும் இத்தனை பரவலாய்ச் சீரழியும் என்று யாராவது கனவாவது கண்டோமா? ஆளாளுக்கு ...
Image
உலகச் சிறுகதை பெ ய ர் க ள் ---------------------------------------- ஜான் அப்டைக் தமிழில் எஸ்.சங்கரநாராயணன் பா ஸ்டனில் இருந்து திரும்பி வருகிறார்கள். ஜாக் காரோட்டிக் கொண்டு வந்தான். அவனருகே முன்னிருக்கையில் ஒரு குழந்தைத் தொட்டில். மகன் அதில் உறக்கத்தில். பின்னிருக்கையில் கிளாரே. ஜோ என்கிற இரண்டு வயது மகளுடன். அவளுக்காக எதோ பாடிக்கொண்டிந்தாள். “வயலில் பட்டாணிகள் வெடித்தன. பறவைகள்?...” “கிங்...” என்றது குழந்தை. பாடின, சிங் என்று சொல்ல வரவில்லை அதற்கு. “உனக்குப் பட்டாணி பிடிக்குமே? எவ்ளோ ருசியா இருக்கும். அதை யாருக்குப் பண்ணித் தரணும்?” “கிங்” என்றது குழந்தை திரும்பவும். அவர்கள் சிங் கிங் என்று எதுகை வருகிறாப் போல எதுவும் பாடல் பாடியிருக்கலாம். “அருமை.” “பறவை மூக்கு, அந்தப் பாட்டு பாடும்மா.” “அதென்னடி பாட்டு? அந்தப் பாட்டு எனக்குத் தெரியாதே. எங்க பாடிக் காட்டு...” “எங்க பாடிக் காட்டு...” “நான் கேக்கறேன் உங்கிட்ட! பறவை மூக்கு பாட்டை யாரு பாடுவா? மிஸ் தூனி பாடிக் காட்டினாளா?” அந்தப் பெயரை ஒருமுறை சொன்னபோது ஜோ சிரித்தாப் போல இப்பவும் சிரித்தாள். மிஸ் தூன...