
நன்றி காணிநிலம் சிற்றிதழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2018 பெற்ற எழுத்தாளரின் சிறுகதை எழுத்தாளருடன் ஒரு மாலை ஓல்கா தோகர்சுக் (போலந்து) ஆங்கிலத்தில் ஜெனிஃபர் குரோஃப்ட் ஆங்கிலம் வழி தமிழில் எஸ்.சங்கரநாராயணன் ---- அ வளது சிறந்த யோசனைகள் இராத்திரிகளில் அவளுக்கு வாய்த்தவையே. பகலைவிட இராத்திரியில் என்னவோ அவள் ஆளே வேறு ஆளாகிப் போனாப் போல. அதைச் சொன்னால், சும்மா அப்படியே சொல்லிட்டிருக்கே, என்றிருப்பான் அவன். நான் என்கிறாப் போல தன்னை முன்னிறுத்தி வேறெதாவது பேச ஆரம்பித்திருப்பான். நான்... பகலில் தான் தெளிவாக சிந்திக்கிறேன். அதுவும், காலைகளில்... எனது முதல் காபியை நான் அருந்திய பிறகு... நாளின் முதல் பாதியில்... தற்செயலாக, (ஓ கடவுளே, என்னவோர் சங்கடமான தற்செயல் அது) செய்தித்தாளில் அவள் வாசித்தாள். பெர்சியா, அலன்ஸ்டெயின் என்று அவன் பயணம் மேற்கொள்ள விருக்கிறான். அவளுக்கு அத்தனை கிட்டத்தில் வருகிறான் என்பது அவளது தூக்கத்தைக் கெடுத்து விட்டது. எல்லாமே ஒட்டுமொத்தமாக அவளிடம் திரும்ப வந்து சேர்ந்தாற் போலிருந்தது. திரும்பி வந்தன என்றுகூட இல்லை. அவை அவளுடனேயே நினைவும...