
குறுந்தொடர் / கடைசிப் பகுதி ஆகாயத்தில் முட்டிக்கொண்டேன் எஸ்.சங்கரநாராயணன் 4 தி ரேஸ் கிழவி அவனிடம் காட்டிக் கொண்டதே இல்லை தன் உள் காயங்களை. அவனும்... தேவையும் இல்லை. காயப் படாதவனுக்கு சாராயக் கடையின் முதலுதவி எதற்காக? இவர்கள் முதலுதவி என நம்பி, மனக் காயங்களை உடலுக்கு ஏற்றிக் கொள்கிறார்கள். உள் காயம் படாத உயிர் உண்டா? சந்தோஷ கணங்களை விட, தோற்றுப் போன, வெருண்ட இருண்ட கணங்களையே வாழ்க்கை பதிவு கொள்கிறது. எதிர்காலத்தில் அவை பாடங்களாக வழிகாட்டலாம், என்கிற சிற்றாசை. எதிர்பார்ப்பு. ஆனால் பெரும்பாலும் அவை பயன்பட வேண்டிய நேரம் பயன்படுத்த லாயக்கு இல்லாத, திருமண கூரைப் புடவையாக, கல்யாணக் கோட்டுகளாக... நைந்தோ அளவு சிறுத்தோ போய்விடுகின்றன. திடீரென்று கண்ணை இருட்டிக்கொண்டு வரும் திரேஸ் கிழவிக்கு. மூச்சிரைக்கும். பசியோ என நினைப்பாள். தானாய் சரியாய்ப் போகும் என...