
நன்றி / கவிதை உறவு ஆண்டு மலர் 2021 பாதுகாப்பு எஸ்.சங்கரநாராயணன் • கா ர்த்திகேயன் இறந்துவிட்டார், என்று கேள்விப்பட்டதுமே, அடாடா, என்று அவருக்கு மைதிலி ஞாபகம் வந்தது. மைதிலி நெருங்க முடியாத தேன்கூடாய் இருந்தாள் அவருக்கு. அது ஒரு காலம். இப்போது மைதிலிக்கே கல்யாணம் ஆகி இருபது இருபத்தியிரண்டு வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர்கூட... அதைப்பற்றி என்ன, அவள் மைதிலியின் பெண். அது போதும். அதைவிட வேறென்ன அடையாளம் வேண்டும். பெண்களில் மைதிலி, அவளே தனிப்பெரும் அடையாளம். மைதிலி ஞாபகம் தன்னில் கமழும் தோறும், தான் இளமையாகி விடுவதாய் அவர் உணர்ந்தார். எல்லா ஆண்களுக்குமே அப்படித்தான் இருக்கும், என ஒரு புன்னகையுடன் அவர் நினைத்துக் கொள்வது உண்டு. ஆண்களுக்குப் பெண்கள் வாசனை வியூகம் தான்! அதாவது காதல் வயப்பட்ட ஆண்களுக்கு. வாசனை என்று கூட இல்லை. அவள் சார்ந்த ஓர் அந்தரங்கபூர்வமான விஷயம், எனக்குத் தெரியுமாக்கும், என்பது மகிழ்வூட்டுகிறது அவர்களை. அந்த அலுவலகம் மைதிலிவாசனையால் நிரம்பி வழிந்தது ஒரு காலம். தலைநிறைய பூ வைத்த மைதிலி. கருப்புச் செடியில் பூத்த மல்லிகையாட்டம். சிரிக்கும்போது எந்த அளவ...