தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ வெளியீட்டு விழா உரை

தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ வெளியீட்டு விழா உரை எஸ். சங்கரநாராயணன் கவிக்கோ அரங்கம், மயிலை 28,12,2014 மாலை 06 மணி நூல் வெளியீடு உயிர்மை பதிப்பகம் ஜ ன் ன ல் ம ல ர் ப தினைந்து இருபது வருடங்களுக்கு முன்பே, தமிழ்மகனின் ஒரு புத்தகத்துக்கு முன்னுரை தந்திருக்கிறேன். ‘தமிழ்மகன் ஆற்றுப்படை‘ என்று அதற்குத் தலைப்பு வைத்ததாக நினைவு. இப்போதும் அதே வேலையை, இரண்டாம் முறையாகச் செய்ய வந்திருக்கிறேன். அவரது ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ நூலை வெளியிடவும், அவரை வாசகருக்கு சிபாரிசு செய்யவுமாக இப்போது இங்கே என் பணி அமைகிறது. எனக்கு தமிழ்மகனின் எழுத்து பிடித்திருக்கிறது. ஆகவே இரண்டாம் முறையும வந்திருக்கிறேன். எல்லாருக்கும் தமிழ்மகனின் எழுத்து பிடிக்கும். உறுத்தாத, வாசிக்க சிரமம் இல்லாத எழுத்து அவருடையது. பிரமைகள் அற்றது அது. தத்துவார்த்த அலட்டல்கள் அவரிடம் இல்லை. ஆகவே அது அவரது எழுத்திலும் இல்லை. அதனால், தன் பாத்திரத்தையும் வாசகனையும் அவர் ஒருபோதும் இவ்விதத்தில் தொந்தரவு செய்வது கிடை...