சைலபதியும் இலக்கியச் சூழலும்

சொற்களின் மீது எனது நிழல் – சிறுகதைகள் சைலபதி பக். 160 விலை ரூ 120/- * நிவேதிதா பதிப்பகம் சென்னை வெளியீடு அலைபேசி 91 89393 87296 email - nivethithappathipagam1999@gmail.com சைலபதியும் இலக்கியச் சூழலும் * எஸ். சங்கரநாராயணன் சை லபதியின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘சொற்களின் மீது எனது நிழல்‘ வெளியாகியிருக்கிறது. நேற்று (27,02,2015) இலக்கிய வீதி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து அவருக்கு ‘அன்னம்‘ விருது அளித்து கௌரவித்தது. அதே நாளில் இந்தத் தொகுதியும் வெளியிடப்பட்டது. இலக்கிய வீதி இனியவன் வெளியிட்டார். முதல் பிரதி நான் பெற்றுக் கொண்டேன். எந்தக் காலத்திலும் இல்லாத அளவில், தமிழ்ச்சூழல் கவலை தருகிறதாய் இருக்கிறது. இந்தக் காலத்தில் எழுத வந்ததே கூட சிரமமான விஷயமாய் இருக்கிறது. மூத்த தலைமுறையினர் எல்லாருக்குமே, எங்க காலம் ஆகா, உங்க காலம் சுகமில்லை… என்கிற புலம்பல் இருக்கும். நான் சொல்வது அந்த மாதிரி அல்ல. இலக்கியத்தில் பொதுவாக அரசியல் தலையீடு குறைவாகவே, அலட்சிக்கத் தக்கதாகவே இருக்கும். அதன் உச்சகட்ட தலையீடு, அதிகாரப் பிடிப...