very short story / America

very short story


துரதிர்ஷ்டம்

ஆலன் இ, மேயர்


உடம்பெங்கும் கடும் வலியுடன் கண் விழித்தேன். என் படுக்கையருகே ஒரு நர்ஸ்.

     ''ஃபியுஜிமா ஐயா...'' என்றாள். ''ரெண்டுநாள் முன்னால் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டதில், உங்கள் நல்லதிர்ஷ்டம், நீங்கள் தப்பித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் இந்த ஆஸ்பத்திரியில் நலமாய் இருக்கிறீர்கள்.''

     பலவீனமாய் நான் கேட்டேன். ''இது எந்த இடம்?''

     ''நாகசாகி'' என்றாள் அவள்.
---
தமிழில் எஸ். சங்கரநாராயணன்


Comments

Popular posts from this blog