‘இன்று நேற்று நாளை‘யை வாழ்த்தும் ‘சுதேசி ஐயர்‘

தற்போது ஃபேஸ்புக்கில்
உலா வரும் சேதி இது…
*
01 சுதேசி ஐயர்
Chitralaya Sriram
**
This might be a long message but request you to read and if possible share it..
 I received a shock when Mr YGee Mahendra asked to read the latest Ananda Vikatan.
 A new upcoming Director from Nallaya Eyakunar has given an interview about his upcoming movie Enru - Netru- Nallai.in which Arya is playing a guest role and Vishnu is playing the main role. The story of the movie was- Some get an opportunity to go to the past in a time machine.. They meet Gandhiji and also look at the world without modern electronic gadgets.. They finally get reformed, This is nothing but the exact replica of our Super hit Drama written by me in 2008 and dramatized by Sri Ygee - Swadeshi Iyer. Even some of the incidents mentioned by the director as highlights of his movie- like meeting with his own young version and jokes on cell phone have been part of our story
 Our play Swadeshi Iyer created a big wave not only in Tamil Nadu but in most of the Indian States and also in USA and Europe. All the big names of the film fraternity like Kamal, Rajni KB, and scores of others have seen and appreciated the thought process that has gone in to this play.
 .New Director Ravikumar (not our old Revikumar) has boasted that he is doing something which no one has attempted in Tamil industry. Even if he claims he has done unknowingly (which he sure would) I am sure someone would have pointed out as he would have told the story to many and the same Ananda Vikatan carried a 2 page review of our play
 I was confident that our play Swadeshi Iyer will one day become a movie . But much to my misfortune the story has been finally taken up by Producers but alas without my name or knowledge.
 Ygee Mahendra apart from taking the lead role to greater heights has also helped me to shape the play to perfection with some of his brilliant ideas. He is also as pained as me to note this development
 Though we have registered the play , we are not contemplating any legal action as of now and we don't have any personal grudge against the aspiring director., However We want to highlight the present sorry state of affairs of publicity hungry world.. I have moved personally with big directors like Sridhar SP Muthuraman and Suresh Krishna and the great Chitralaya Gopu is my Dad.. I know how hard they had all worked to raise to such levels. But now even before a movie releases a director gives an interview boasting about his product as something no one else has thought while in reality it is an replica of an established theater play
 Something is wrong somewhere and we need to correct ourselves.. otherwise we would be bringing disrepute to the industry which was revered and worshiped by our earlier generation. Muktha Ravi Vee Yaar Kousalya Sriram
 02
ஆனந்த விகடனின் பேட்டியை வாசித்துவிட்டு திரு சித்ராலயா ஸ்ரீராம் – முதன்மைப் பொறுப்பாசிரியருக்கு தனது ஆதங்கத்தை வெளியிட்டு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது ‘இன்று நேற்று நாளை‘ இயக்குநர் ஆர். ரவிக்குமாரிடம் பரிமாறப் பட, இயக்குநர் ஆர். ரவிக்குமார் அதற்கு முறைப்படி ஆனந்த விகடனுக்கு ஒரு தன்னிலை விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அதன்பின்தான் FACEBOOK மூலமாக சித்ராலயா திரு ஸ்ரீராம் இந்த ஆற்றாமையைப் பகிர்கிறார்… இயக்குநர் ஆர். ரவிக்குமார் விகடனுக்கு என்ன விளக்கக் கடிதம் எழுதினார்? அவருடன் தொடர்பு கொண்டு அந்தக் கடித நகலைப் பெற்றேன்… அது கீழே தரப்படுகிறது.
*
03 இன்று நேற்று நாளை
Director R Ravikumar
*
அன்பான ஆனந்த விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு,

     வணக்கம். சித்ராலயா திரு. ஸ்ரீராம் அவர்கள் தங்களுக்கு அனுப்பி வைத்த கடித நகல் கிடைத்தது. நமது விகடன் பேட்டியைப் படித்தபோது அவர் கவலைப்பட்டதைப் போலவே, அந்தக் கடிதத்தை முதற்கட்ட கவலையுடன் நான் வாசித்தேன். படைப்பாளியின் படைப்பின் அசல்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற பிடிவாதமான நம்பிக்கை, அவரைப் போலவே எனக்கும் உண்டு. ‘சுதேசி ஐயர்‘ என்கிற அந்த நாடகத்தை நான் பார்க்காத சூழலில், அந்தக் கடிதம் வாசித்து முடித்த பின்தான் என் மனம் அமைதியடைந்தது. என் திரைப்படத்தின் கதையம்சத்துக்கும் அவரது ‘சுதேசி ஐயர்‘ நாடகத்துக்கும் எவ்வித ஒட்டும் உறவும் அடையாளமும் சாயலும் சாயமும் இல்லை என நான் கண்டுகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.

     சித்ராலயா திரு. ஸ்ரீராம் அவர்கள் கவலைப்படத் தேவை இல்லை, என உறுதியளிக்கிறேன். என் கதை ’சுதேசி ஐயர்‘ நாடகத்தின் கதை இல்லை. தலைப்பு உட்பட சுதேசி ஐயர் கதை நாட்டுப் பற்று என்கிற நல் அம்சத்தை முன்னிறுத்தி விரித்து விளக்கி வளர்கிறது. என் கதையின் மையக் கருத்தாக நான் நாட்டுப் பற்று என்கிற அம்சத்தை மேற்கொள்ளவில்லை.

இன்று நேற்று நாளை‘ கதை, ஒரு காலத்தின் ஊடான முன் பின் பயணம் என்றாலும் கலகலப்பான திரைப்படம் அது. அதன் நோக்கமும் வீச்சும் வேறு தளத்தில் அமைகின்றன, என அறியத் தருகிறேன். நண்பர் சித்ராலயா திரு. ஸ்ரீராம் அதன் கதை குறித்து, அதில் தன் சாயல் குறித்து எவ்வித ஐயமும் கொள்ள வேண்டியது இல்லை.
    
‘சுதேசி ஐயர்‘ நாடகத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. தகவலுக்கு நன்றி. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ‘சுதேசி ஐயர்‘ கதைக் கரு நன்றாக இருக்கிறது.

     ‘இன்று நேற்று நாளை‘ ஒரு பீரியட் ஃபிலிம் அல்ல. அந்தக் காலகட்டத்துக்குப் போய் நவீன காலத்தையும் அதையும் ஒப்பிட்டு மன மாற்றம் அடைக்கிறாப் போல கதையமைப்பு என் திரைப்படத்தின் கதையிலோ திரைக்கதையிலோ இடம் பெறவில்லை என்பதை அறியத் தருகிறேன்.

எனது திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் வரும் பல மான்டேஜ்களில் ஒரு சிறு காட்சி அது. பத்து விநாடியளவில் கடந்து போகிற காட்சிதான் அது. காந்தியடிகளின் ஊர்வலத்தில் இவர்கள் ஊடே புகுந்து அவiரை தற்கால டிஜிடல் கேமெராவில் படம் எடுக்க, அதை வெளிநாட்டு நபர் ஒருவர் வியப்புடன் பார்ப்பதாகக் காட்சி. அவ்வளவே. கதையில் காந்தி சார்ந்து கால ரீதியான வேறு பதிவும் போக்கும் இல்லை.
    
டைம் டிராவல் என்கிற அம்சத்தில் தமிழில் திரைப்படத்தில் முதல் முயற்சி இது. சுமார் ஒன்றரை வருடங்களாக நான் இதன் திரைக்கதை வடிவத்துக்கு உழைத்திருக்கிறேன். திரைப்படம். மிகச் சிறப்பாக உருவாகி யிருக்கிறது. பெரும் வரவேற்பை அது தமிழ் ரசிகர்களிடம் பெறும் என்கிற பலத்த நம்பிக்கையுடன் அதன் இறுதிக்கட்ட பணிகளில் நாங்கள் உற்சாகமாய் ஈடுபட்டிருக்கிறோம்.
    
விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
    
திரைப்படம் வெற்றியடைய உங்கள் நல்லாசியும் வாழ்த்துக்களும் வேண்டும். சித்ராலயா திரு. ஸ்ரீராம், மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோருக்கும் இளையவனான என் அன்பும் வணக்கமும்.

மிக்க அன்புடன்,

;ஆர். ரவிக்குமார்
 ‘இன்று நேற்று நாளை‘ திரைப்பட இயக்குநர்
06, 02, 2015 மாலை 07,00
*
04
இயக்குநர் ஆர். ரவிக்குமாரை வெகு இளைய வயதில் இருந்தே நான் அறிவேன். எனது அருமையான வாசகரில் ஒருவர். நாளைய இயக்குநரில் அவர் பங்குபெறும் போது ஒவ்வொரு குறும்படத்துக்கும் என்னிடம் அவர் உரையாடுவார். ஏ.ஏ.ஹெ.கே. கோரி, மற்றும் அறிவழகன் என எனது இரு எழுத்தாள நண்பர்களின் கதையை அவர் தேர்வு செய்து குறும்படங்களில் பயன்படுத்தினார்.
 ஃபேன்டசி பாணி கதைகளை இயக்க அவருக்குப் பிரியம் அதிகம். அவரது ‘ஸீரோ கிலோமீட்டர்‘ அழகான ஃபேன்டசி குறும்படம். யூ டியூபில் கிடைக்கக் கூடும்.
இயக்குநர் ரவிக்குமார் பிற கதைகளின் / இயக்குநர்களின் சாயல் இல்லாமல் தனது கதைகளை அமைக்க எடுக்கிற சிரத்தை எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம், இன்று நேற்று நாளை‘ பற்றி என்னிடம் ஆரம்ப கட்டம் முதலே அவர் பேசி வந்திருக்கிறார். அதன் இந்த இறுதி வடிவம், படப்பிடிப்புக் கட்ட முதல் வடிவம் வரை நான் அறிவேன். அதில் நண்பர் சித்ராலயா ஸ்ரீராம் ஐயப்படும்படி, ‘சுதேசி ஐயர்‘ நாடகக் கதையமைப்பின் நெடி கிடையாது… என நூறு சதவிகிதம் என்னால் கூற முடியும்.
05
இயக்குநர் ரவிக்குமார், இப்படியொரு சர்ச்சை வந்திருக்கிறது, எனத் தெரிவித்ததும், நீ அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறாயா?... என்று கேட்டேன். ஐயோ, எனக்கு அந்த நாடகம் பற்றிய விஷயமே, விவரமே தெரியாது… என்றார். “டைம் டிராவல் பண்ணிப் போய்ப் பார்த்திடடு வர வேண்டியதுதானே?“ என்றேன். அவர் பாவம், டைம் டிராவல் பண்ணி எதிர்கால வெற்றியைப் பார்த்துக் கொண்டிருக்கிற வேளை இது…
 கவலைப்படாதே ரவி. உன் கடிதத்தை சித்ராலயா திரு ஸ்ரீதர் கட்டாயம் புரிந்து கொள்வார்… என ஆறுதல் வழங்கினேன்.
06
‘இன்று நேற்று நாளை‘யை
வாழ்த்தும்
‘சுதேசி ஐயர்‘
*
சற்றுமுன் கிடைத்த செய்தி. அவர்கள் ஒருவரோடு ஒருவர் சுமுகமாகத் தங்கள்நிலை விளக்கம் பரிமாறிக் கொண்டார்கள், எனத் தெரிகிறது. பேசித் தீர்க்க முடியாத விஷயங்கள் உலகத்தில் இல்லைதான். இருவரின் நல்ல மனசும், புரிந்துகொள்ளும் பாங்கும் மனதை நிறைக்கின்றன.
 இரண்டுமே சுயமான அழகான படைப்புகளே… எனத் தெரிகிறது. சித்ராலயா திரு ஸ்ரீராம் வெற்றி பெற்று விட்டார். டைம் டிராவல் / ஃபேன்டசி இயக்குநர் ரவிக்குமார் வெற்றி பெறப் போகிறார். இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
 *

07 .02. 2015 முன்னிரவு 07,30

Comments

Post a Comment

Popular posts from this blog