
சூரரைப் போற்று ஆனந்த விகடனில் புதிய ஆத்திசூடி என்று பாரதியாரின் வரிகளை அடிப்படையாக் கொண்டு சிறப்புச் சிறுகதை எழுத வாய்ப்பு அளிக்கப் பட்டபோது ”சூரரைப் போற்று” என்ற புதிய ஆத்திசூடியை வைத்து நான் எழுதிய சிறுகதை இது. ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில், அதை மீள் பிரசுரம் செய்திருக்கிறார்ள். காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும் ---- விகடன் டீம் ஆனந்த விகடன் பொக்கிஷம் சிறுகதை. 22-11-1998 ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை * ஊரே துக்கமாக இருந்தது. சலூனிலோ, டீக்கடையிலோ, தேர்முட்டியிலோ... மக்கள் வருத்தமாக ப் பேசிக்கொண்டார்கள். 'அடடா சாமுண்டி மாட்டிகிட்டான் போல....' பத்து பன்னிரண்டு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் சுருளி மலை காடு. சாமுண்டி அங்கேதான் ஒளிந்திருந்தான். ஒருமுறை பத்திருபது போலீஸ்காரர்கள் துப்பாக்கியும் தோட்டாவுமாக உள்ளே புகுந்து தேடிப் பார்த்தார்கள். காடு முழுக்க அலசிப் பார்த்தாகிவிட்டது. சலித்துப் பார்த்தாகிவிட்டது. சாமுண்டியைக் காணவில்லை. போலீசுக்கே அலுப்பாகிவிட்டது. ஒரு சலனமில்லை. ஒரு அசைவுமில்லை. அவன் இங்கே இல்லை என்று முடிவு செய்து போல...