
குறுந்தொடர் / நன்றி லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழ் பறவைப்பாதம் பகுதி நான்கு ச ட்டைப்பையில் அவளது கையெழுத்தில் அவளது தொலைபேசி எண்... என்பதே தனி உற்சாகம் தருகிறது. இதை ஹெச் எம் கிட்ட குடுத்திறவா?... அவருக்குதான் கல்யாணம் ஆயிட்டதே... என்றாள் பிருந்தா சிரிக்காமல். எனக்குந்தான் பிருந்தா.... என முணுமுணுத்துக் கொண்டார். பிருந்தா சிரிக்கிறாள். “எனக்கும் தான் மிஸ்டர்!” காதல் என்பது ஒரு வகை நட்பு. அது வெண்ணெயாய்த் திரட்சி காண்பதும் உண்டு. திருமணம் அதன் பெயர். என்றாலும் காதல்... அது ஒரு வாழ்வின் சுவை தானே. போட்டது தாயம், இறக்கிவிட்டது பாம்பு... என்கிறாற் போல, காலம் உருட்டிவிட்ட கணங்களில் திசை பிரிந்து தள்ளித்தள்ளி விழுந்து கிடந்தார்கள். இடையில் ஏ அப்பா, தலைமுறை அகழி. என் பெரிய பிள்ளை பிளஸ் ட்டூ. சின்னவன் எட்டாவது வாசிக்கிறான். உனக்கு எத்தனை குழந்தைகள் பிருந்தா? இரவில் அவர் உறங்கவில்லை. கண்ணை மூடிக் கிடந்தாலும் கண்ணுக்குள் அந்தப் பாவாடை சட்டை தாவணி பிருந்தா. அது ஒரு கனவு. நிஜமாக நடந்த ஒரு கனவு. ரெட்டைச் சடையுடன் கார்த்திகையன்று புடவை கட்டிய பிருந்தா. இளமை அவர்களை ஒரே ...